தேஹுமலை ( புனே) ஐயப்பன் திருப்புகழ்
வணக்கம், வாழியநலம்!
சலசலத்து ஓடும் இந்த்ரியாணி நதிக்கரை!
பன்னீர் தெளிக்கும் பூந்தூறல்!
புனிதர் திரு துகாராம் மஹராஜ் வாழ்ந்து, அபங்கங்களால்
விட்டலனை அலங்கரித்த க்ஷேத்திரம்!
தம்புராவின் சுருதியும், வெண்கலத் தாளங்களின் ஒலியும்
துள்ளலோசை கொப்பளிக்கும் அபங்கங்களும், நாற்றிசையும்
எதிரொலிக்கும் நாமசங்கீர்த்தனங்களும் ஒருங்கிழைந்து ஒலிக்கும்
தேஹூ (Dhehu) கிராமம்.
பக்த துகாராம் எழுதிய அபங்கங்களை மூட்டைகட்டி இந்த்ரியாணி நதியில் எறிந்துவிட,
அவ்வேடுகள் சேதமின்றிப் புனலஎதிர்துக் கரையேறிய அற்புத நதிதீரம்!
ஊர்மக்களனைவரும் பார்த்திருக்கத் தன் ஊனுடலோடு கருடவாஹனமேறி
விண்ணகருக்கு அம்மஹான் எழுந்தருளிய திருத்தலம்.
தேஹு தலத்தில், நமது தேசிய இராணுவத்துக்குச் சொந்தமான சிறு குன்றின் மீது
பதினெண்படிகளோடு கோயில் கொண்ட ஐயப்பனைத் தரிசிக்கும் போது பிறந்த் திருப்புகழ்!
தேஹுமலை ( புனே) ஐயப்பன் திருப்புகழ்
சந்தம்: தான தனதான தனதான
ஊடி, உறவாடி, விளையாடி
ஊழின் வழியோடி உதிராதே
ஏடு கரையேறும் நதிதீரம்
ஏதும் ஒருநாமம் அதுபோதும்
பாடி வழிபாடு புரிவோரின்
பாத மலர்சேர அருள்வாயே!
தேடி வருவோரின் துயர்தீர
தேஹு மலைமேவு பெருமாளே!
சு.ரவி
2 Comments:
This comment has been removed by the author.
திருவடியும், மகர ஜோதியும், பொன்னாம்பல மேடும் நமது உடலில் உள்ளது.
மேலும் அறிந்துகொள்ள http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html
ஐயப்பனை காண சபரிமலை செல்வதும் நம்மை நாம் அறிவதும் ஒன்று
Post a Comment
<< Home