SU RAVI'S PORTAL




Hi,
Welcome to "SWETHA PADHMAM"-(The White Lotus)-Abode of SARASWATHI-The Goddess of all forms of Fine-arts.My passions - MUSIC, ART & POETRY(TAMIL) are Shared herein. Welcome again to the White Lotus! Wish you a happy blogging!-Su.Ravi

Wednesday, March 16, 2011

கணபதியே1.. ஸ்ரஸ்வதியே!


சபரி மலைக்குச் செல்லும் போது சொல்லும் வழிநடை கோஷ்ங்களான
"ஸ்வாமியே ஐயப்பா - ஐயப்பா ஸ்வாமியே " என்பதைத் தொடர்ந்து
பக்த்ர்கள் " கணபதியேஸ்ரஸ்வதியே 'என்ற நாமாவளியை விளித்துச்
செல்வர். தவிர, பல கேலண்டர், நோட்டுப் புத்தகங்கள், ஸ்வாமி படங்களிலும் கணபதியுடன்
ஸ்ரஸ்வதி வீற்றிருக்கும் காட்சியைப் பார்த்திருக்கிறோம்.
இந்த கணபதி -ஸரஸ்வதி combinaton என்னைச் சிந்திக்க வைத்தது.
சுக்லாம்பரதரன், மோனநிலை அருளும் மூலாதார மூர்த்தி, ப்ரணவஸ்வரூபன்,
லம்போதரன், தந்தம் ஒன்றோடெழுந்தருளும் அம்பாஸுதன்,
விகடன், விக்னராஜன், விநாயகன், கணநாதன், கஜமுகன் - இவன் ஞானகாரகன்.
தெள்ளிய நீரில், அன்னப் பறவல்கள் சூழ, வெண்தாமரை மேல் வெண்பட்டுடுத்தி,
வீணை இசைக்கும் வேதமாதா, விதியுவதி, விந்த்யநிவாஸினி, வித்யாதாயினி
ச்யாமளை, ராஜமாதங்கி,சகலகலாவல்லி, ஸரஸ்வதி, கலைவாணி,பாரதி -இவள் ஞானதாயினி
மோனமும், ஞானமும் வேண்டி நாம் சேர்ந்து சொல்லுவோம்
" கணபதியே1.. ஸ்ரஸ்வதியே!

Labels:

0 Comments:

Post a Comment

<< Home