நாதவைபவம்
நாத வைபவம்
இசை:ரமேஷ் விநாயகம் வரிகள்: சு,ரவி
(ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நிகழ்ச்சி (30-01-11) சென்னை)
பகுதி 1
( தகிட தாம்த தகிட தாம்த தகிட தாம்த் தகிட தாம்த)மவுனமென்ற திரைவிரிந்து ஒலிவரைந்த ஓவியங்கள்
மலர்கள் சிந்தும் நறுமணங்கள் மனதில் ராக மோஹனங்கள்
ஸ்ருதிஇழைந்த ஸ்வரதரங்கம் லயமெழுந்த ஸுகம்ருதங்கம்
இசையிலே நனைந்த தேஹம் இணையிலாத ஸ்வர்க்கலோகம ஸாமவேத கானமாகும் வானவீதி மீதுலாவும்
நாமரூப மேதுமின்றி நாதமாக மாறும் நேரம்
அகிலமெங்கும் அதிசயங்கள் பரவுகின்ற பரவசங்கள்
இதயமென்ற குகை நுழைந்து வருடுகின்ற நவரஸங்கள்
அலைஎழும்பி நதிசிணுங்கும் மலையிறங்கி அருவிபொங்கும்
முகிலினங்கள் இடிமுழன்கும் மழைபொழிந்து தரையிறங்கும்
After Carnatic Music Ananamdham.. Anantham..
இனிய அனுபவம்; பண்சிந்தும் இணையிலாத ஸுநாத வினோத்..
ஹிந்துச்தானி ஆலாபனைக்குப் பின்:
ஸங்கீதம் தான் துணையே- ஜகமிதில்- ஸுக
ஸங்கீதம் தான் துணையே
தகதிமி ததாம்த தகதிமி ததாம்த
தகதிமி ததாம்த தகிட தகிட தக
குறையெது மிலாத நிறைவடைய யோக
வழிதெரியுமாம்! பண் மிளிரும் இனிய ஸுக
சிவன் பகுதி
( தக்திமி தகதிமி தாம் தாம் தகதிமி
தகதிமி தகதிமி தகதிமி தகதிமி
தான தனந்தன தான தனந்தன
தத்தோம் தனதன தன தன தன தன
தந்த தனந்தன் தந்த தனந்தம்
தாம் தாம் தாம் தாம் தந்த தனந்தன்
ததத தனத்தாம் தத்த் தனத்தாம்
தனனா தனனா தனனா தனனா
தன தன தம் -தன- தன தன தம்)
சம்பு நடம்பயிலும் தருணம்
ஸ்ப்தஸ்வங்கள் உடன் உதயம்.. விரிசடை முகிலென வான்மேல் பரவிட
பொறியுறு நுதலிடை எரியழல் நடமிட
ஏழுலகங்களும் தூளி பறந்திட
பூத கணங்களின் கோஷ மெழுந்திட
கங்கை குலுங்கிட, தண்மதி உருகிட
அங்கை எழுந்தொரு செந்தழல் ஆடிட
கைத்தா மரையினில் டம டம டம வென
வைத்தொரு டமருகம் இடியென ஒலிதர
சிந்தை மயங்கும் நந்திம்ருதங்கம்
மேளம், தாளம், பஞ்சமுகம், பறை
கொட்டும் இடக்கை குமுறும் உடுக்கை
சிவமே லயமாய், சிவமே ஸ்ருதியாய்
விசை நடனம் தரும் இசை வடிவம்.
சம்பு நடம்பயிலும் தருணம்
ஸ்ப்தஸ்வங்கள் உடன் உதயம்.
கிருஷ்ணர் பகுதி
ராதாமாதவ முகுந்தா- மோஹன முரளீ
மதிவதன..
உயிரினங்க ளெலாம் உன்னால் மயங்கும்
குழலின் இசையால் உலகம் இயங்கும்
குழலில் விரல் மூடி மூடி அசையும்
அமுத நதியாய்ப் பெருகும் இசையும்
ஸ்ரஸ்வதி பகுதி
விந்த்யவாஸினி ஸரஸ்வதி.
வித்யாஅதாயினிஸரஸ்வதி.
வேத மாதா ஸரஸ்வதி.
நாதம் நீ தா, ஸரஸ்வதி.
விதியுவதீ, ஹே! ஸரஸ்வதி.
வீணா பாணிஸரஸ்வதி.
யாழிசை மீட்டும்ஸரஸ்வதி.
ஏழிசை வடிவேஸரஸ்வதி.
மதுரம் அம்ருதம் பகுதி
( தனனா தனனா தனனா தனனா
தனனா தனனா அம்ருதம் மதுரம் )
விதியாம் தடையும் கலியாம் இருளும்
விலகும் தருணம் அம்ருதம் மதுரம்
கனவாய் நனவாய்த் தடுமாறுகையில்
கரையேறுவதே அம்ருதம் மதுரம்
ஓடும் மனமும் ஒரு புள்ளியிலே
உறையும் தருணம் அம்ருதம் மதுரம்
புறமே அகமாய், புலனே இசையாய்
உணரும் தருணம் அம்ருதம் மதுரம்
பரமே மனதில் கவியாய் ஒளியாய்ப்
புலரும் தருணம் அம்ருதம் மதுரம்
குறையேதுமிலாப் பரிபூரணமாய்
மலரும் தருணம் அம்ருதம் மதுரம்
பலனேதுமிலா நிலைகூடுவதே
பகவான் சரணம் அம்ருதம் மதுரம்
அலையேதுமிலா அமைதிக் கடலாய்
அமையும் தருணம் அம்ருதம் மதுரம்
இசையே தவமாய் லயமே கதியாய்
இழையும் தருணம் மதுரம் அம்ருதம்
உள்நாடியிலே ஓரேழ் ஸ்வரமும்
உதிரும் தருணம் மதுரம் அம்ருதம்.
http://www.archive.org/details/NadhavaibavamLabels: இசைக் கவி
0 Comments:
Post a Comment
<< Home