ஊழிக்கூத்தனின் ஊர்த்துவ தாண்டவம்
அப்பனே, அம்மை யோடு
ஆடலில் போட்டி என்றோர்
க்ற்பித்க் கார ணத்தைக்
காட்டியுன் நடனமாடும்
சொப்பன ஆசை யெல்லாம்
தீர்த்தனை போலும்;உந்தன்
ஒப்பிலா நாடகத்தை
உவக்கிறேன், சிதம்பரேசா!
காத்ணி கழற்றிப் போட்டுக்
காலினால் அணிய வென்று
பாதம்நீ உயர்த்தி யாடி
பார்வதி நாண வைத்தாய்!
காதலால் தோற்றா ளன்னை!
காதலே ஜெயித்தத்ங்கே!
ஓத்ரும் நாட கத்தை
உவக்கிறேன் சித்ம்பரேசா!
தீர்த்தமும், நிலவும் சூடி
தீர்க்கமாய் நிமிர்ந்தெழுந்து
பார்த்தவர் நெஞ்சம் எல்லாம்
பரவசம் பற்றிக் கொள்ள
ஆர்த்தெழும் பாதம் தூக்கி
அலட்சிய மாகச் செய்யும்
ஊர்த்துவ தாண்டவத்தை
உவக்கிறேன் சிதம்பரேசா!
உரகமும், பிறையும் சூடி
உமையவள் காணவென்று
கரணமோர் நூற்றி யெட்டும்
காட்டி நீ ஆடுகின்றாய்!
சரணமே உயர்த்தி ஆடும்
சங்கரா அதனைச் சற்றென்
சிரமிசை வைத்தாய் மேனி
சிலிர்க்கிறேன், சிதம்பரேசா!
சென்றவை எவையும் சற்றும்
சிந்தையைத் தின்ன வெண்டாம்!
ந்ன்றினி வரவிருக்கும்
நாட்களெல் லாம் சிறக்க
நின்னையே வேண்டி நின்றோம்!
நீயெமக் கருளல் வேண்டுல்
மன்றினில், மனத்தில் ஆடும்
மன்னனே,சிதம்பரேசா!
சு.ரவி
0 Comments:
Post a Comment
<< Home