SU RAVI'S PORTAL




Hi,
Welcome to "SWETHA PADHMAM"-(The White Lotus)-Abode of SARASWATHI-The Goddess of all forms of Fine-arts.My passions - MUSIC, ART & POETRY(TAMIL) are Shared herein. Welcome again to the White Lotus! Wish you a happy blogging!-Su.Ravi

Friday, April 22, 2011

கங்காதரன்

நான் முதல்முதலில் அறிந்த "கங்காதரன்" ஓவியமாமேதை ரவிவர்மா வரைந்த வடிவமே!
'நுங்கு நுரை பொங்க வரும் கங்கையின் அகந்தை'ப் பெருவீழ்ச்சியைத் தாங்கும் சிவனது ஏகாக்ரமான concentrated look உம், காலளை விரித்து ஊன்றி, பின்னே நீட்டிய கரங்களிரண்டில் சூலாயுததைப் பற்றி நிற்கும் நிலைப்பாடும்"…..
இதற்கு முற்றிலும் மாறாக, திருகோகர்ணம் என்னும் சிவக்ஷேத்திரத்தில் இருக்கும் இந்த கங்காதரன்
சாந்தம் தவழும் வதனமும், முகிழ்த்த புன்முறுவலுமாக, 'ஒரு கங்கை என்ன, ஒரு கோடி கங்கை ப்ரவாஹங்கள் வீழினும் என் ஜடாமுடியின் ஒரு கோடியில் அவை அடங்கும்' என்ற நிலைப்பாட்டுடன் ஒயிலாக, ஒசிந்து நிற்கிறான்.
       கங்கையும், ரவிவர்மா ஓவியத்தில் போலன்றி, பயபக்தியுடன் கை குவித்து இறங்கி வருகிறாள்
        "கங்கா தரன்,சங்க ரன், பிங்க ளன், சம்பு,
               காபாலி,  கருணாகரனை" ப்
பார்க்க, ரசிக்க

Friday, April 15, 2011

ஜெய் ஹனுமான்!


  
வாயுகுமாரன் பதம் சரணம்
     வலிமையின் மைந்தன் பதம் சரணம்
நேசநிவாசன் பதம் சரணம்
     நீலவிலாஸன் பதம் சரணம்!

பாதை திறந்தது வாயுமுகம்-அதைப்
    பார்த்தவர் கண்களும் ஜோதிமயம்-இனி
மீதமில்லை-இந்த தேஹமில்லை-மனம்
    மீள்வதில்லை சுகம் ஓய்வதில்லை!

                                                           -கவிஞர் ரமணன்

இசைஅரசி எம்.எஸ்


 இசைஅரசி எம்.எஸ். அவர்களின் கறுப்பு வெள்ளைப் புகைப்படம் ஒன்று என்
கவனத்தை ஈர்த்ததின் விளைவு இந்தக் காலைநேர ஓவியம்.

தேஹுமலை ( புனே) ஐயப்பன் திருப்புகழ்

வணக்கம், வாழியநலம்!
 
சலசலத்து ஓடும் இந்த்ரியாணி நதிக்கரை!
 
பன்னீர் தெளிக்கும் பூந்தூறல்!
 
புனிதர் திரு துகாராம் மஹராஜ் வாழ்ந்து, அபங்கங்களால்
விட்டலனை அலங்கரித்த க்ஷேத்திரம்!
 
தம்புராவின் சுருதியும், வெண்கலத் தாளங்களின் ஒலியும்
துள்ளலோசை கொப்பளிக்கும் அபங்கங்களும், நாற்றிசையும்
எதிரொலிக்கும் நாமசங்கீர்த்தனங்களும் ஒருங்கிழைந்து ஒலிக்கும்
தேஹூ (Dhehu) கிராமம்.
 
பக்த துகாராம் எழுதிய அபங்கங்களை மூட்டைகட்டி இந்த்ரியாணி நதியில் எறிந்துவிட,
அவ்வேடுகள் சேதமின்றிப் புனலஎதிர்துக் கரையேறிய அற்புத நதிதீரம்!
 
ஊர்மக்களனைவரும் பார்த்திருக்கத் தன் ஊனுடலோடு கருடவாஹனமேறி
விண்ணகருக்கு அம்மஹான் எழுந்தருளிய திருத்தலம்.
 
தேஹு தலத்தில், நமது தேசிய இராணுவத்துக்குச் சொந்தமான சிறு குன்றின் மீது
பதினெண்படிகளோடு கோயில் கொண்ட ஐயப்பனைத் தரிசிக்கும் போது  பிறந்த் திருப்புகழ்!
 
                     தேஹுமலை ( புனே) ஐயப்பன் திருப்புகழ்
 
                               சந்தம்: தான  தனதான   தனதான
 
                        ஊடி,  உறவாடி,      விளையாடி
                             ஊழின் வழியோடி  உதிராதே
                        ஏடு   கரையேறும்     நதிதீரம்
                             ஏதும் ஒருநாமம்   அதுபோதும்
                        பாடி வழிபாடு        புரிவோரின்
                              பாத  மலர்சேர     அருள்வாயே!
                        தேடி வருவோரின்      துயர்தீர
                             தேஹு  மலைமேவு   பெருமாளே!
 
                                                                சு.ரவி

பிரஹதாம்பிகை


நாளும், கோளும் நலமே புரிய
பெரியநாயகியின் பதமலர் பணிவோம்!

திருவேங்கைவனம் உறையும் பிரஹ்தாம்பிகையின்
 ஓவியமும், அம்பாள் நவவெண்பாவும்..

பார்க்க, படிக்க, ரசிக்க...

Pt Bhimsen Joshi

 

In Jan 2011, Hindustani Sangeeth World lost its PithaMahar Pt Bhimsen Joshi.

To me Shri Joshi was to Hindustani what Semmangudi Mama was to Carnatic Music.

A doyen in his field, Shri Joshi was conferred "Bharath Ratna" Award by the President of India who came to his residence.

Thursday, April 14, 2011

Naadha Vaibavam

 This is the URL to listen to the Title song by Ramesh Vinayakam with Lyrics by me







http://www.archive.org/details/Nadhavaibavam

Labels:

thakshinaamuurthi

காலடி அமர்ந்து நாலவர்
    கைகளைக் கூப்பிக் கேட்க
ஆலடி அமர்ந்து ஞானம்
    அருளிடும் தேவா போற்றி!

தென்திசை நோக்கி உந்தன்
    திருமுகம் காட்டிக் கையில்
சின்முத் திரை தரித்த்
    சிவபெரு மானே போற்றி,

விழியிலே ஞானம் பொங்கும்,
    விரிசடை கங்கை தங்கும்
மொழியெனும் அலைகளில்லா
   மௌனமாம் கடலே போற்றி!

இகபர சுகங்கள் என்ற
    இருளிலே ஆழ்ந்தி டாமல்
அகஒளி ஏற்றி என்னை
    ஆட்கொளும் குருவே போற்றி!

பிறைநிலா முடியில் சூடும்
    பிஞ்ஞகா, யோகமூர்த்தீ!
குறைவிலா ஞானம் தந்த
   குருபரா போற்றி, போற்றி!

Monday, April 11, 2011

நாதவைபவம்

நாத வைபவம்

இசை:ரமேஷ் விநாயகம் வரிகள்: சு,ரவி

(ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நிகழ்ச்சி (30-01-11) சென்னை)

பகுதி 1

( தகிட தாம்த தகிட தாம்த தகிட தாம்த் தகிட தாம்த)
மவுனமென்ற திரைவிரிந்து ஒலிவரைந்த ஓவியங்கள்
மலர்கள் சிந்தும் நறுமணங்கள் மனதில் ராக மோஹனங்கள்

ஸ்ருதிஇழைந்த ஸ்வரதரங்கம் லயமெழுந்த ஸுகம்ருதங்கம்
இசையிலே நனைந்த தேஹம் இணையிலாத ஸ்வர்க்கலோகம
ஸாமவேத கானமாகும் வானவீதி மீதுலாவும்
நாமரூப மேதுமின்றி நாதமாக மாறும் நேரம்

அகிலமெங்கும் அதிசயங்கள் பரவுகின்ற பரவசங்கள்
இதயமென்ற குகை நுழைந்து வருடுகின்ற நவரஸங்கள்

அலைஎழும்பி நதிசிணுங்கும் மலையிறங்கி அருவிபொங்கும்
முகிலினங்கள் இடிமுழன்கும் மழைபொழிந்து தரையிறங்கும்

After Carnatic Music Ananamdham.. Anantham..

இனிய அனுபவம்; பண்சிந்தும் இணையிலாத ஸுநாத வினோத்..

ஹிந்துச்தானி ஆலாபனைக்குப் பின்:

ஸங்கீதம் தான் துணையே- ஜகமிதில்- ஸுக

ஸங்கீதம் தான் துணையே

தகதிமி ததாம்த தகதிமி ததாம்த

தகதிமி ததாம்த தகிட தகிட தக

குறையெது மிலாத நிறைவடைய யோக

வழிதெரியுமாம்! பண் மிளிரும் இனிய ஸுக

சிவன் பகுதி

( தக்திமி தகதிமி தாம் தாம் தகதிமி

தகதிமி தகதிமி தகதிமி தகதிமி

தான தனந்தன தான தனந்தன

தத்தோம் தனதன தன தன தன தன

தந்த தனந்தன் தந்த தனந்தம்

தாம் தாம் தாம் தாம் தந்த தனந்தன்

ததத தனத்தாம் தத்த் தனத்தாம்

தனனா தனனா தனனா தனனா

தன தன தம் -தன- தன தன தம்)

சம்பு நடம்பயிலும் தருணம்

ஸ்ப்தஸ்வங்கள் உடன் உதயம்.. விரிசடை முகிலென வான்மேல் பரவிட

பொறியுறு நுதலிடை எரியழல் நடமிட

ஏழுலகங்களும் தூளி பறந்திட

பூத கணங்களின் கோஷ மெழுந்திட

கங்கை குலுங்கிட, தண்மதி உருகிட

அங்கை எழுந்தொரு செந்தழல் ஆடிட

கைத்தா மரையினில் டம டம டம வென

வைத்தொரு மருகம் இடியென ஒலிதர

சிந்தை மயங்கும் நந்திம்ருதங்கம்

மேளம், தாளம், பஞ்சமுகம், பறை

கொட்டும் இடக்கை குமுறும் உடுக்கை

சிவமே லயமாய், சிவமே ஸ்ருதியாய்

விசை நடனம் தரும் இசை வடிவம்.

சம்பு நடம்பயிலும் தருணம்

ஸ்ப்தஸ்வங்கள் உடன் உதயம்.

கிருஷ்ணர் பகுதி

ராதாமாதவ முகுந்தா- மோஹன முரளீ

மதிவதன..

உயிரினங்க ளெலாம் உன்னால் மயங்கும்

குழலின் இசையால் உலகம் இயங்கும்

குழலில் விரல் மூடி மூடி அசையும்

அமுத நதியாய்ப் பெருகும் இசையும்

ஸ்ரஸ்வதி பகுதி

விந்த்யவாஸினி ஸரஸ்வதி.

வித்யாஅதாயினிஸரஸ்வதி.

வேத மாதா ஸரஸ்வதி.

நாதம் நீ தா, ஸரஸ்வதி.

விதியுவதீ, ஹே! ஸரஸ்வதி.

வீணா பாணிஸரஸ்வதி.

யாழிசை மீட்டும்ஸரஸ்வதி.

ஏழிசை வடிவேஸரஸ்வதி.

மதுரம் அம்ருதம் பகுதி

( தனனா தனனா தனனா தனனா

தனனா தனனா அம்ருதம் மதுரம் )

விதியாம் தடையும் கலியாம் இருளும்

விலகும் தருணம் அம்ருதம் மதுரம்

கனவாய் நனவாய்த் தடுமாறுகையில்

கரையேறுவதே அம்ருதம் மதுரம்

ஓடும் மனமும் ஒரு புள்ளியிலே

உறையும் தருணம் அம்ருதம் மதுரம்

புறமே அகமாய், புலனே இசையாய்

உணரும் தருணம் அம்ருதம் மதுரம்

பரமே மனதில் கவியாய் ஒளியாய்ப்

புலரும் தருணம் அம்ருதம் மதுரம்

குறையேதுமிலாப் பரிபூரணமாய்

மலரும் தருணம் அம்ருதம் மதுரம்

பலனேதுமிலா நிலைகூடுவதே

பகவான் சரணம் அம்ருதம் மதுரம்

அலையேதுமிலா அமைதிக் கடலாய்

அமையும் தருணம் அம்ருதம் மதுரம்

இசையே தவமாய் லயமே கதியாய்

இழையும் தருணம் மதுரம் அம்ருதம்

உள்நாடியிலே ஓரேழ் ஸ்வரமும்

உதிரும் தருணம் மதுரம் அம்ருதம்.

http://www.archive.org/details/Nadhavaibavam

Labels: