கங்காதரன்
நான் முதல்முதலில் அறிந்த "கங்காதரன்" ஓவியமாமேதை ரவிவர்மா வரைந்த வடிவமே!
'நுங்கு நுரை பொங்க வரும் கங்கையின் அகந்தை'ப் பெருவீழ்ச்சியைத் தாங்கும் சிவனது ஏகாக்ரமான concentrated look உம், காலகளை விரித்து ஊன்றி, பின்னே நீட்டிய கரங்களிரண்டில் சூலாயுததைப் பற்றி நிற்கும் நிலைப்பாடும்"…..
இதற்கு முற்றிலும் மாறாக, திருகோகர்ணம் என்னும் சிவக்ஷேத்திரத்தில் இருக்கும் இந்த கங்காதரன்
சாந்தம் தவழும் வதனமும், முகிழ்த்த புன்முறுவலுமாக, 'ஒரு கங்கை என்ன, ஒரு கோடி கங்கை ப்ரவாஹங்கள் வீழினும் என் ஜடாமுடியின் ஒரு கோடியில் அவை அடங்கும்' என்ற நிலைப்பாட்டுடன் ஒயிலாக, ஒசிந்து நிற்கிறான்.
கங்கையும், ரவிவர்மா ஓவியத்தில் போலன்றி, பயபக்தியுடன் கை குவித்து இறங்கி வருகிறாள்
"கங்கா தரன்,சங்க ரன், பிங்க ளன், சம்பு,
காபாலி, கருணாகரனை" ப்
பார்க்க, ரசிக்க…
0 Comments:
Post a Comment
<< Home