கணபதியே1.. ஸ்ரஸ்வதியே!


சபரி மலைக்குச் செல்லும் போது சொல்லும் வழிநடை கோஷ்ங்களான
"ஸ்வாமியே  ஐயப்பா  - ஐயப்பா    ஸ்வாமியே " என்பதைத்  தொடர்ந்து
 பக்த்ர்கள்  "  கணபதியே…  ஸ்ரஸ்வதியே 'என்ற நாமாவளியை  விளித்துச்
 செல்வர். தவிர,  பல கேலண்டர், நோட்டுப்  புத்தகங்கள்,  ஸ்வாமி படங்களிலும் கணபதியுடன்
 ஸ்ரஸ்வதி  வீற்றிருக்கும் காட்சியைப் பார்த்திருக்கிறோம்.
 இந்த கணபதி  -ஸரஸ்வதி  combinaton  என்னைச் சிந்திக்க வைத்தது.
 சுக்லாம்பரதரன்,  மோனநிலை அருளும் மூலாதார மூர்த்தி, ப்ரணவஸ்வரூபன், 
 லம்போதரன்,  தந்தம்  ஒன்றோடெழுந்தருளும் அம்பாஸுதன்,
 விகடன், விக்னராஜன், விநாயகன், கணநாதன், கஜமுகன்      -                                 இவன் ஞானகாரகன். 
 தெள்ளிய  நீரில், அன்னப்  பறவல்கள் சூழ,  வெண்தாமரை மேல் வெண்பட்டுடுத்தி, 
 வீணை இசைக்கும்  வேதமாதா,  விதியுவதி,  விந்த்யநிவாஸினி,  வித்யாதாயினி
 ச்யாமளை, ராஜமாதங்கி,சகலகலாவல்லி,  ஸரஸ்வதி, கலைவாணி,பாரதி       -இவள்  ஞானதாயினி
 மோனமும், ஞானமும் வேண்டி நாம்  சேர்ந்து சொல்லுவோம்
 "  கணபதியே1..  ஸ்ரஸ்வதியே! 
 Labels: ART


