ஐயப்பன் கீர்த்தனைகள் பகுதி 2
நண்பர் நாராயணனின் குரலில் மேலும் சில ஐயப்பன் கீர்த்தனைகளைக்
கீழ்வரும் வலைத்தள இணைப்பில் கேட்டு ரசிக்கலாம்.
http://archive.org/details/IyyappanKiirththanaiVol2
3 Track களில் உள்ள இந்தப் பாடல்களைப் பற்றிய சிறு குறிப்புகள் வருமாறு:
1. நினைத்ததுமே மெய்சிலிர்க்குதையா- ரீதிகௌள ராகம்
நாராயணன், க.ரவி ஆகியோருடன் கட்டுநிறைக்காகத் திருச்சிக்கு ராக்ஃபோர்ட்டில் இரவுப் பயணம்.
எங்களை மிகவும் ஈர்த்த ரீதி கௌள ராகத்தில், நாராயணன் இந்தப் பாடலின் ஆரம்ப வரிகளைப் பாட
க.ரவியும், சு.ரவியும் மாறி,மாறி ஆளுக்கொரு வரி எனப் பாடி நிறைவு செய்த பாடலிது.
( இது போன இணைப்பின் இறுதிப் பாடல். பாடலின் பிற்பகுதி இங்கே ஒலிக்கிறது)
2. சபரிமலையின் ஐயனே உனைச் சரணடைந்தேன் மெய்யனே- மாயாமாளவகௌள ராகம்.
1985 டிசம்பர் மாதம். மனைவி, 5 வயதுப் பெண்குழந்தை சென்னையிலிருக்க, தனியே கல்கத்தா வாசம்.
மலைக்குச் செல்ல விரதம். மாலை பணிமுடிந்து, ஹூக்ளி நதியில் படகிலன் மேல்தளத்திலமர்ந்து
வீடுதிரும்பும் நேரம்.சுமார் 8 டிகிரி குளிர். மனைவி, மக்கள் என்று பாசத்திலும், நேசத்திலும் மனம் மயங்கிய
தருணம். அந்த mystic சூழலுக்கும், மனநிலைக்கும் ஏற்ப, மாயாமாளவகௌள ராகத்தில் பிறந்த
பாடல்.
3. பொன்னம்பலம் அது எங்கள் மனம்- ஹிந்தோளம் ராகம்.
"நேரார் தமக்கு நெருப்பென நிற்கும் நிமலநின்தன்
தாரார் தடந்தோள் தரிசிக்க வேண்டித் தவிக்குமன்பர்க்(கு)
ஓரோர் கணமும் ஒருயுக மாக வளர்ந்துவெய்யோன்
தேரார்ந்த அச்சு முறிந்ததே போலத் தெரிகின்றதே!
என்று எழுந்த விருத்தத்திற்கு contrast ஆக,
" ஐயனைத் தரிசிக்கும் கணம் ஒரு யுகமாக நிலைக்கும் படி இந்த உலகம் உருளாமல் உடனே உறையட்டும்
என்ற பிரார்த்தனையோடு பிறந்த பாடல்.
4. வாள்வாங்கி வீற்றிருக்கும் வாழ்வே - கரஹரப்ரியா ராகம்
மிகுந்த பிரயாசைகளுக்குப் பின் கிடைத்த அச்சங்கோவில் தரிசனம்.
ஐயன் கையில் வாளேந்தி அரசகோலத்தில் வீற்றிருக்கும் காட்சி.
முழுக் களபச் சாத்து- சந்தனக் காப்பு- கருணைபொழியும் கருவிழிகள் திறந்து, சிவப்பு நிறத்தில் உதடுகள் எழுதி
அழகுமேனியனாக எதிரே ஒளிர்ந்த வீரத்திருமேனி கண்டு கரஹரப்ரியாவில், சரணத்தில் ராகமுத்திரையோடு
பிறந்த பாடல்.
5. உன்னைத்தான் சரணமென்று - தோடி ராகம்
போன இணைப்பில் எழுதியபடி, பூர்விகல்யாணியைத் தொடர்ந்து, அதே வருடம் பயணத்தின் போது, நண்பன்
நாராயணன் ஆலாபனை செய்ய, பெருவழியில் பிறந்த இரண்டாவது கீர்த்தனை. இதிலும் பல்லவி, அநுபல்லவி,
மத்யமகாலம், சரணங்கள், மத்யம காலம் என்ற ஃபார்மேட்டில், 'குருதாஸ' எனற முத்திரையும்,
பல்லவியில் சூசித ராகமுத்திரையும் அமைந்துள்ளன.
6. சபரி எங்கள் தாயகம் - ஜோன்புரி ராகம்
நண்பர் நாராயணனின் மேல்ஸ்தாயி சஞ்சாரங்களும், பிருகாக்களும் கொடுத்த உந்துதல்தான்
ஜோன்புரியில் பிறந்த இந்தப்பாடல். பாடலை முழுமையாகப் பாடுகையில் ஒவ்வொரு
சரணத்திற்கும் இடையில் ஒரு சரண விளி இருந்தால் இன்னும் நிறைவாக இருக்குமே என்று
கருதி, இவ்விணைப்புகள் சேர்க்கப் பட்டன.
7. விழிவேண்டல் விருத்தம் - கேதாரகௌள + தன்யாசி ராகங்கள்
விழிவேண்டல் பதிகம்- ராகமாலிகை
1987 ஆம் வருடம். எங்கள் பெரியகுருஸ்வாமி ( தற்போதைய குருவின் தந்தையார்)
அமரர் திரு. ராமச்சந்திரன் குருஸ்வாமி அவர்கள் விழிப்பார்வை குன்றி சிகிச்சை
பெற்ற போது ஐயப்பனை வேண்டிப் பாடிய விருத்தமும் பதிகமும். நண்பன்
நாராயணனின் ராகஞானத்திற்கு இந்த ராகமாலிகை ஒரு பெரும் சான்று.
8. ஓடும் என்மனம் ஒடுங்காதா- தேவகாந்தாரி ராகம்
இந்தப் பாடலின் பல்லவி முதலில் ஸஹானா ராகத்தில்தான் என்னுள் பிறந்தது.
ஆனால், நண்பன் நாராயணன் இதை தேவகாந்தாரியில் முயற்சி செய்தபோது அது இன்னும்
அழகாகப் பொருந்தி ஒலித்தது. பெங்களூர் ராஜா ஐயங்காரின் "க்ஷீர ஸாகர சயனா" கேட்ட்
நினைவுப் பதிவு இந்தப் பாடலின் அமைப்புக்குப் பெரிதும் தூண்டுகோலாக இருந்திருக்கக் கூடும்.
9. அடியவர் மனமென்னும் ஊஞ்சலிலே ஆட- குறிஞ்சி
ஒருமாறுதலுக்கு, நாராயணனே எழுதி இசைத்த இந்தக் குறிஞ்சி ராகப் பாடல் ஐயப்பனை
ஊஞ்சலில் அமர்த்தி, ஆடவைத்து லாலி பாடி அழகுபார்க்கிறது.
10. ஆரத்திப் பாடல்
ஸாயி ஆரத்திப் பாடல் கேட்ட பாதிப்பில், ஐயப்பனுக்கு எழுதிய ஆரத்திப் பாடல்
கேட்க, ரசிக்க….
சு.ரவி